மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை கைவிட வலியுறுத்தி, புதுச்சேரியில் மே 17 இயக்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.
மேலும், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவர் ஸ்ரீதர், மனிதநேய மக்கள் கட்சி பஷீர் அகமது உள்ளிட்ட பலரும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், ”மத்திய அரசின் வேளாண் மசோதாக்களால் விவசாயமும் விவசாயிகளும் அழிக்கப்படுவார்கள். அமெரிக்காவின் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை, மத்திய அரசு அடகு வைக்கக்கூடாது.
எனவே உடனடியாக உலக வர்த்தகக் கழகத்திலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும். ஒரே நாடு, ஒரே திட்டம் என்ற பெயரில் நாட்டு மக்களை பெரும் முதலாளிகளுக்கு அரசு தாரை வார்க்கக்கூடாது” என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: வேளாண் சட்ட திருத்த மசோதா விவகாரத்தில் அதிமுக மீது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு