ETV Bharat / bharat

திருமண இணையதளம் மூலம் பெண் டாக்டரிடம் ரூ.12 லட்சம் மோசடி: நைஜீரியர் உட்பட 4 பேர் கைது

ஹைதராபாத்: திருமண இணையதளம் மூலம் பெண் டாக்டரிடம் 12 லட்சம் மோசடி செய்த மூன்று நேபாளிகளையும், ஒரு நைஜீரியரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்
author img

By

Published : Mar 12, 2020, 5:03 PM IST

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் டாக்டர் ஒருவர், மறுமணத்திற்காக தன்னுடைய சுயவிவரத்தை திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். இதே வலைதளத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் என்ற பெயரில் ஒரு சுயவிவரமும் இருந்துள்ளது. இதனை நம்பிய பெண் மருத்துவர், அந்த நபரோடு பேச்சுக் கொடுத்தார். நாளடைவில் அந்த உறவு திருமணம் வரையிலும் வளர்ந்தது.

திருமண இணையதளம் மூலம் பெண் டாக்டரிடம் 12 லட்சம் மோசடி

இந்நிலையில், அந்த நபர் தங்க நகைகள், பரிசுப் பொருட்கள், மருத்துவத் தொழிலுக்குத் தேவையான சில உபகரணங்கள், விலையுர்ந்த வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை அனுப்புவதாக பெண் மருத்துவரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கொரியர் ஊழியர் ஒருவர் பெண் மருத்துவரைத் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார்.

அப்போது, சில கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் இங்கிலாந்தில் இருந்து வந்திருப்பதாகவும், அதனை வரி செலுத்தி பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார். அதற்காக, 12 லட்சத்து 45 ஆயிரம் இரண்டு தவணைகளாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெண் மருத்துவர் காவல் துறை உதவியை நாடியுள்ளார்.

இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மோசடிக் கும்பல் டெல்லியில் வசிப்பதைக் கண்டுபிடித்தனர். நான்கு பேர் கொண்ட அந்தக் கும்பல், திருமண வலைதளங்களில் விளம்பரம் கொடுக்கும் பணக்கார பெண்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்களை குறிவைத்து ஏமாற்றுவது தெரியவந்தது.

இதையடுத்து, மோசடி செய்த மூன்று நேபாளிகளையும், ஒரு நைஜீரியரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களின் வங்கிக் கணக்கிலுள்ள 3 லட்சத்தை முடக்கியுள்ளனர். மேலும், அந்தக் கும்பல் பயன்படுத்திய 18 செல்போன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் 2,723 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.