ETV Bharat / bharat

கரோனாவை தடுக்க இதுதான் ஒரே வழி - ராகுல் தரும் ஐடியா

டெல்லி: அதிக அளவில் வைரஸ் தொற்று குறித்து சோதனை நடத்துவதே கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Rahul
Rahul
author img

By

Published : Apr 15, 2020, 1:14 PM IST

கோவிட்-19 தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்தியாவில் இதுவரை 11,439 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியாவில் வைரஸ் பரவல் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், இந்தியாவில் வைரஸ் தொற்று குறித்த சோதனைகள் போதியளவு நடைபெறுவதில்லை என்று பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் அதிகளவு சோதனைகளை நடத்துவதே கோவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்று ராகுல் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு தாமதித்தது. இதனால் தற்போது அவற்றுக்குத் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

  • India delayed the purchase of testing kits & is now critically short of them.

    With just 149 tests per million Indians, we are now in the company of Laos (157), Niger (182) & Honduras (162).

    Mass testing is the key to fighting the virus. At present we are nowhere in the game.

    — Rahul Gandhi (@RahulGandhi) April 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியாவில் தற்போது 10 லட்சம் பேருக்கு 149 என்ற விகிதத்தில்தான் பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. லாவோஸ் நாட்டில் இந்த எண்ணிக்கை 157ஆக உள்ளது. நைஜர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளில் இந்த எண்ணிக்கை முறையே 182 மற்றும் 162ஆக உள்ளது. இந்த நாடுகளுடன்தான் தற்போது நாம் உள்ளோம்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிக அளவிலான மக்களுக்குப் பரிசோதனைகள் நடத்துவதே ஒரே வழி. ஆனால், இதில் நாம் மிகவும் பின்னால் இருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா - இந்தியாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த சுந்தர் பிச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.