கேரளாவில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக பொறியியல் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனர். தேர்வு கண்காணிப்பு ஆணையம் பல்கலைக்கழகத்தில் சோதனையில் ஈடுபட்டபோது மாணவர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி தேர்வு எழுதியது தெரியவந்தது.
இதேபோல், நான்கு பொறியியல் கல்லூரிகளில் முறைகேடு நடைபெற்றது சோதனையின்போது தெரியவந்தது. இந்தச் சோதனையின்போது, 28 மொபைல் போன்கள் பறிமுதல்செய்யப்பட்டன. 28 மொபைல் போன்களில் 16 மொபைல் போன்கள் ஒரே கல்லூரியிலிருந்து பறிமுதல்செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முறைகேடு குறித்த ஆதாரங்களைத் தேர்வு கண்காணிப்பு ஆணையம் சேகரித்துள்ள நிலையில், இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டுவருகிறது. முறைகேடு கண்டறியப்பட்டது தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அதிகாரப்பூர்வமாக ரத்துசெய்யப்பட்டது.