இந்தியாவில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக குறைந்துவருகிறது. இருப்பினும், இதன் காரணமாக மக்கள் அலட்சியமாக இருந்தால் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போல இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்படக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி மாவட்டத்தில் உள்ள வேத பிளாஸ்டர் சன்ஸ்தா என்ற நிறுவனம் மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாஸ்க்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாஸ்க்குகள் 20 விழுக்காடு பருத்தியையும் 80 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட மாட்டு சாணத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த மாஸ்க்குகளில் காய்கறி விதைகளும் சேர்க்கப்படுகிறது. மாஸ்க்குகளை உபயோகித்த பின்னர், அவற்றை மண்ணில் போட்டால், மற்ற வகை மாஸ்க்குகலை போல் இல்லாமல், இதிலுள்ள விதைகளில் இருந்து செடிகள் வளரும்.
இந்த மாஸ்க்குகள் 11 பெண்களை கொண்ட பெண்கள் சுயஉதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படுவதால், அந்த பெண்களும் இதன் மூலம் வேலை வாயப்பை பெற்றுள்ளனர்.
மேலும், மாட்டு சாணம் ஆன்ட்டி பாக்டீரியா பண்புகளை கொண்டிருக்கிறது என்றும் இந்த முகமூடிகளைப் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள ஹோமியோமதி மருத்துவர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!