மும்பை: இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நாள் முடிவில், சென்செக்ஸ் 329.17 புள்ளிகள் (+0.94%) உயர்ந்து 35,171.27ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.10 புள்ளிகள் (+0.91%) உயர்ந்து 10,383.00ஆக இருந்தது.
- +இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை 6.94% (ரூ.748.15) அதிகபட்சமாக உயர்ந்திருந்தது.
- -ஐடிசி பங்குகளின் விலை 3.54% (ரூ.195.10) அதிகபட்சமாக சரிந்திருந்தது.
மேலும், டெல்லி நுகர்வோர் சந்தை நிலவரப்படி டீசலின் விலை 80 ரூபாயைக் கடந்து, இந்த மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டு நேற்று வர்த்தகமானது. அதேபோன்று பெட்ரோலின் விலையும் டெல்லி சந்தையில் 80 ரூபாயைக் கடந்து வணிகமானது.