நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் எல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, இரு மாநிலங்களும் கடும் வெள்ளப் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
கடந்த வாரத்தில் அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது வெள்ள பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 28 லட்சமாக இருந்த நிலையில், நேற்றைய (ஆகஸ்ட் 2) தேதி நிலவரப்படி எண்ணிக்கை 9 லட்சமாகக் குறைந்துள்ளது.
கடந்த வார நிலவரப்படி, 1.22 லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது அது 51 ஆயிரத்து 770 ஆக குறைந்துள்ளது. மாநிலத்தில், இதுவரை 109 பேர் வெள்ளத்தாலும், 26 பேர் நிலச்சரிவாலும் உயிரிழந்துள்ளனர். பெரும் பாதிப்பைச் சந்தித்த காசிரங்கா தேசியப் பூங்காவில், இதுவரை 147 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
காசிரங்கா பூங்கவுடன் சேர்த்து, இமய மலையை ஒட்டியுள்ள பல்வேறு வனவிலங்குகள் பூங்கா பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'நான் நலமாக இருக்கிறேன்' - ப.சிதம்பரம்!