மாவோயிஸ்டுகள் தங்கியிருப்பதாக சந்தேகித்து கோழிக்கோட்டில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்திவருகிறது. கொச்சி பிரிவு என்.ஐ.ஏ அலுவலர்கள் தலைமையில், செருகுலத்தூர் அருகேயுள்ள பிரியங்கோடு பகுதியில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
மாவோயிஸ்ட் சார்பு துண்டு பிரசுரங்களை விநியோகித்ததாக கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஆலன் சுஹைப், தாஹா பாசல் ஆகியோருடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆலன், தாஹாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இச்சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், வயநாட்டில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிபி ஜலீல் வீட்டிலும் தேசியப் புலனாய்வு அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.
ஆலன், தாஹா ஆகிய இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேசியப் புலனாய்வு அலுவலர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாவோயிஸ்ட் டேனிஷுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்