கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள படிஞ்சாரதாரா வனப்பகுதி அருகில் உள்ள வலரம் குன்னில், இன்று (நவ.03) காலை தண்டர்போல்ட் பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முகாமிட்டிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
அதில், மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து தண்டர்போல்ட் காவல்துறையினர் கூறுகையில், "வலரம் குன்னில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய 400 காவலர்கள்!