ETV Bharat / bharat

உபி.க்குத் திரும்பும் குடிபெயர்ந்தோரில் 22 விழுக்காட்டினருக்கு கரோனா! - புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா அறிகுறி

லக்னோ: உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பும் குடிபெயர் தொழிலாளர்களுக்கு கரோனா உறுதியாகும் விகிதம் 22.2 விழுக்காடு என அம்மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்தார்.

உபி.,க்கு திரும்பும் பெரும்பான்மையான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கரோனா!

author img

By

Published : May 20, 2020, 4:41 PM IST

சொந்த ஊரிலிருந்து உழைப்பை நம்பி வெளியேறிய பல லட்சம் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு அதிர்ச்சியளித்தது. இதனால் மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்பிச் செல்கின்றனர்.

அந்த வகையில், நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்துசெல்லும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வெளிமாநில குடிபெயர் தொழிலாளிகள் ஊரைச் சென்றடைந்ததும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் அமித் மோகன் பிரசாத் கூறுகையில், “பெரும்பான்மையான குடிபெயர் தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட முகாம்களில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

அவர்களுக்கு அறிகுறி இல்லையெனில், 21 நாள்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்புகிறோம். கரோனா அறிகுறி இருந்தால், தொடர்ந்து மருத்துவச் சோதனைகளுக்கு உள்படுத்தப்படுகிறார்கள்.

குடிபெயர் தொழிலாளர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கரோனா பரவாமலிருக்க மொஹல்லா கண்காணிப்புக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

வீடுகளில் தொழிலாளர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதை அக்குழுக்கள் உறுதிசெய்ய வேண்டும். உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பிவரும் குடிபெயர் தொழிலாளர்களுக்கு கரோனா உறுதியாகும் விகிதம் 22.2 விழுக்காடாக உள்ளது. முதலமைச்சர் மாவட்ட வாரியாக கரோனா பரிசோதனை மையங்களை அமைப்பதாக அறிவித்துள்ளார்” என்றார்.

அம்மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவனீஷ் அஸ்வதி கூறும்போது, "எட்டு லட்சம் குடிபெயர் தொழிலாளர்களை அழைத்துவர 656 சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 578 சிவப்பு குறியீட்டுப் பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: 'முன் களப்பணியாளர்களை கரோனாவிலிருந்து காக்க வேண்டும்' - யோகி ஆதித்யநாத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.