latest national news முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 87ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இன்று அதிகாலையே அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் திகார் சிறையிலிருந்தவாரே தனது வாழ்த்து செய்தியைப் பதிவிட்டார்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக பல்வேறு ஹேஷ்டேக்குகளை நெட்டிசன்கள் உருவாக்கினர். அதில் குறிப்பாக #ManmohanSingh, #HappyBirthdayDrSingh ஆகிய ஹேஷ்டேக்குகள் உலக அளவில் ட்ரெண்டாகிவருகிறது.
மேலும் இந்தியாவில் கடும் பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாகவும் அதை மீட்க மன்மோகன் சிங்கால்தான் முடியும் எனப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டனர். அதற்கு ஏற்றார்போல் #FinanceMinisterMissing என்ற ஹேஷ்டேக்கும் உலக அளவில் ட்ரெண்டாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பொருளாதார மேதை!