கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நாட்டுடனான எல்லைப்பகுதியை மணிப்பூர் அரசு காலவரையின்றி மூடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சிறப்பு உள்துறை செயலர் கியான் பிரகாஷ் கூறுகையில், "கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச எல்லைப் பகுதியைத் தாண்டி மக்கள் செல்வதற்கும் வெளிநாட்டவர் நாட்டுக்குள் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதுவே தொடரும்" என்றார்.
இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாவட்ட நீதிபதிகள், காவல் துறை, மற்ற அரசு அலுவலர்கள் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்ற உத்தரவை சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய அரசுகளும் விதித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சபரிமலை கோயிலுக்கு வராதீங்க' - திருவாங்கூர் தேவசம் போர்டு