நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து மணிப்பூர் முதலமைச்சர் பேசுகையில், மருத்துவ, தொழில்துறை வளர்ச்சிக்காக கஞ்சா உபயோகத்தை சட்டப்பூர்வமாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதித்து அடுத்து நடைபெறவுள்ள மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அருணாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிக்க:‘கஞ்சா’தான் எனக்கு போதி மரம் - இயக்குநர் பாக்யராஜ் ஓபன் டாக்!