ராகுல் காந்தி டெல்லி தேர்தல் பரப்புரையின் போது, “வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி அதுகுறித்து எதுவும் பேசவில்லை. இன்னும் ஆறு மாதங்களில் பிரதமர் மோடி வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை வரும். இளைஞர்கள் கம்பை எடுத்து பிரதமர் மோடியை அடிப்பார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
மக்களவையில் இன்று பாஜக மக்களவை உறுப்பினர்கள் ராகுலின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக மத்திய அமைச்சர் ஹர்ஸ் வர்தன் ராகுல் கருத்துக்கு கண்டணம் தெரிவித்தபோது, வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாதது குறித்து ராகுல் காந்தி கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய அமைச்சர் பேசுவதாக் கூறி காங்கிரஸ் எம்பிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஹர்ஸ் வரதனை நோக்கி சென்றபோது ஆளுங்கட்சி எம்பிகள் அவரைத் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "நான் வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தேன். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் பதிலளிக்கமால் பேச்சை மாற்றினார். நான் மக்களவையில் பேசுவது பாஜகவிற்கு பிடிக்கவில்லை. எங்களை மக்களவையில் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை. மக்களவையில் பொறுத்தப்பட்டுள்ள கேமராவில் பாருங்கள் மாணிக்கம் தாகூர் யாரையும் தாக்கவில்லை. மாறாக அவரைதான் ஆளுங்கட்சி மக்களவை உறுப்பினர்கள் தாக்கினர்” என்றார்.
இதையும் படிங்க: கேரள பட்ஜெட் அறிக்கையில் மகாத்மா படுகொலைக் காட்சி - உருவான புதிய சர்ச்சை