ETV Bharat / bharat

'அயன்' பட பாணியில் தங்கம் கடத்தல் , ஒருவர் கைது - மங்களூரு விமான நிலையம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு : வெளிநாட்டிலிருந்து 633 கிராம் தங்கத்தை மலக்குடலில் மறைத்து கடத்திவந்த நபர் மங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

mangalore gold seized
mangalore gold seized
author img

By

Published : Feb 12, 2020, 10:11 AM IST

Updated : Feb 12, 2020, 12:04 PM IST

வெளிநாட்டிலிருந்து மங்களூரு வழியாக தங்கம் கடத்தப்படுவதாக மங்களூரு விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், நேற்று வெளிநாட்டிலிருந்து வரும் பணிகளிடம் சுங்க அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்தேகப்படும்படியான நபர் ஒருவரைக் கண்ட சுங்க அலுவலர்கள் அவரை தனியாக அழைத்து சென்று மருத்துவ உபகரணங்கள் மூலம் சோதனையிட்டனர்.

இதில், அந்த நபர் மலக்குடலில் மறைந்து தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர், இனிமா கொடுத்து 633 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அலுவலர்கள் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டி
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டி

விசாரணையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்டவர் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த சய்ஃபுதின் தேக்கில் பழேவாலபில் (23) ஆவார். இவர் கடத்திவந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 25 லட்சத்து 57 ஆயிரத்து 320 ரூபாய் என சுங்க அலுவலர்கள் தெரிவத்தனர்.

இதையும் படிங்க : கணவருக்கு 'கும்பி பாகமா' - என்னம்மா இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க!

Last Updated : Feb 12, 2020, 12:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.