ETV Bharat / bharat

சபரிமலை கோயில்  நடை திறப்பு!

சபரிமலை: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜையை முன்னிட்டு இன்று மாலை திறக்கப்பட்டது.

Mandala Pooja at Swami Iyappan Temple in sabarimala
author img

By

Published : Nov 16, 2019, 4:58 PM IST

Updated : Nov 16, 2019, 5:22 PM IST

சபரிமலை நடை

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து 48 நாள்கள் நடக்கும் பூஜை மண்டல பூஜையாகும். இதற்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடைதிறக்கப்பட்டது. அப்போது சபரிமலை நடையைப் பூஜைகள் செய்து மேல்சாந்தி கண்டரரு மகேஷ் மோகனரரு திறந்துவைத்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார்.

அதன்பின் புதிய மேல்சாந்தியாக பொறுப்பேற்கும் ஏ.கே. சுதிர் நம்பூதிரிக்கு, கண்டரரு மகேஷ் மோகனரரு வேத மந்திரங்களை சொல்லிக் கொடுப்பார். அதேபோல, மாளிகைபுரம் மேல்சாந்தியாக எம்.எஸ். பரமேஸ்வரன் நம்பூதிரி பொறுப்பு ஏற்கிறார். அதன்பின் சபரிமலையில் புனிதமாகக் கருதப்படும் 18 படிகளுக்கு படிபூஜை நடத்தப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.

மண்டல பூஜை

கார்த்திகை முதல் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.கே. சுதிர் நம்பூதிரி ஐயப்பன் கோயிலில் முறைப்படி பூஜைகள் செய்து மண்டல பூஜையைத் தொடங்கிவைத்தார். சுவாமி ஐயப்பன் கோயிலில் இன்று முதல் தொடர்ந்து 48 நாள்களுக்கும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிச.27ஆம் தேதி நடைபெறும். மண்டல பூஜைக்காக இருமுடி கட்டி சபரிமலைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்கள் நிலக்கல், பம்பை வழியாகச் சபரிமலைக்கு இன்று நண்பகல் 2 மணிக்கு மேல்தான் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

சரண கோஷம் முழக்கம்

சபரிமலை புனித யாத்திரை செல்பவர்கள் இருமுடி கட்டி கடும் விரதமிருந்து செல்வார்கள். இந்த விரதம் ஒரு வார காலம் முதல் ஒரு மண்டலம் வரை தொடரும். கரடுமுரடான மலைப்பகுதியிலும் 'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சுவாமியே ஐயப்பா' என சரணகோஷம் முழங்க செல்வார்கள்.

ஐயப்பன் சிவன் மற்றும் விஷ்ணுவின் அம்சம் என்பதால், அவருக்கு தேங்காய் நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. பசு நெய் கோபாலனாகிய விஷ்ணுவையும் முக்கண் தேங்காய் சிவனையும் குறிக்கும். ஆகவே இதனை உடனே எடுத்துச் செல்கின்றனர். இக்கோயிலில் காலங்காலமாக சில நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

கட்டுப்பாடு

அதில் முக்கியமானது, 10 வயது முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவது கிடையாது. 10 வயதுக்குள்பட்ட, 50 வயதைக் கடந்த பெண்கள் இங்கு தாராளமாகச் சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்கலாம். இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்லலாம் எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சில இளம்வயது பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சித்தனர். இதில் சில மாற்று மத பெண்களும் அடங்கும். இதனால் சபரிமலை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாரதிய ஜனதா உள்ளிட்ட வலதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின.

நடை திறப்பு

இந்தப் போராட்டத்தை காவலர்கள் தடியடி நடத்தி கலைத்தனர். இதில் சுவாமி ஐயப்ப பக்தர்களும் காயமுற்றனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த மனுக்கள் மீது அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியது.

Mandala Pooja at Swami Iyappan Temple in sabarimala
பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயில்

எனினும் கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்கவில்லை. இதனால் தற்போதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் பத்தாயிரம் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பனை தரிசனம் காண பக்தர்கள் ஆவலுடன் வருகைபுரிகின்றனர். பக்தர்களின் சரண முழக்கம், பம்பை, சபரிமலை என அப்பகுதி முழுவதும் ஒலிக்கிறது.

இதையும் படிங்க : சபரிமலைக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Intro:Body:

sabarimala-2019-opening-dates

Conclusion:
Last Updated : Nov 16, 2019, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.