சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தை இந்தியாவில் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரா கோலாப்பூர் பகுதியில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த 68 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பிரமிளா ராஜே மருத்துவமனையின் கொரோனாவுக்கான தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரின் பரிசோதனை முடிவுகள் இரண்டு நாள்களில் வரவிருந்த நிலையில், இன்று காலை திடீரென்று உயிரிழந்தது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஹரியானா, டெல்லி, மும்பை, புனேவுக்குச் சென்று தனது நகரத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு இந்தியாவில் இரண்டு நபர்கள் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த நிலையில், மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளது மக்களிடையே வைரஸ் குறித்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 110 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா விடுமுறை: பள்ளிகளில் எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது...