ETV Bharat / bharat

4 பெண்களை மணந்து, 23 பெண்களை ஏமாற்றிய நபர் கைது

பெங்களூரு: விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

man-who-married-4-women-and-cheated-23-women-has-arrested

author img

By

Published : Jun 10, 2020, 7:23 AM IST

கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்தவர் சுரேஷ். அவர் திருமண வலைத்தளங்களில் விவாகரத்துப் பெற்ற பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் பேசிப் பழகி திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி சமீபத்தில் அவர், திருமண வலைத்தளம் மூலம் பைதரஹள்ளியைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து, அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நம்பவைத்துள்ளார். அதையடுத்து அவர் அந்தப் பெண்ணிடம் திருமணத்திற்கு முன்பு நாம் வீடு கட்ட வேண்டும் எனக்கூறி ரூ.10 லட்ச ரூபாயும், 80 கிராம் தங்க நகைகளையும் பெற்றுள்ளார். அவற்றைப் பெற்றபின் அவர் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார்.

அதனால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்ட பெண் பைதரஹள்ளி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரைக் கைது செய்தனர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் ​​சுரேஷ் இதுவரை 4 பெண்களை மணந்து 23க்கும் மேற்பட்ட பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: வங்கி அலுவலர் எனக் கூறி பணம், நகை மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.