உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த 20 வயது நபர் மகாராஷ்டிரா காவல் துறை கைது செய்து உத்தரப் பிரதேச காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
முன்னதாக யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் மும்பையைச் சேர்ந்த 25 வயது இளைஞரை மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை கைது செய்தது. அந்த நபர், யோகியை வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்போவதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று (மே 22) தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கைக்குப் பின்னர், யோகி ஆதித்யநாத்துக்கு மேலும் ஒரு மிரட்டலை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியைச் சேரந்த நபர் விடுத்துள்ளார். அதில் இதுபோன்ற கைது நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விளைவுகளை முதலமைச்சர் சந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இரண்டாவது மிரட்டல் விடுத்த 20 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்த உத்தரப் பிரதேச காவல் துறை, அவரை அம்மாநிலத்தின் சிறப்புக் காவல் படையிடம் ஒப்படைத்துள்ளது.
இதையும் படிங்க: அதிகார குவியல் இல்லை, அதிகார பரவலே தேவை - மத்திய அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்