ETV Bharat / bharat

400 கிலோமீட்டர் நடந்தே சென்ற இளைஞர் - கர்நாடகா மாநிலம்

பெங்களூரு: ஊரடங்கு உத்தரவு காரணமாக போக்குவரத்து இல்லாததால் 400 கி.மீ. இளைஞர் ஒருவர் நடந்தே சென்றுள்ளார்.

நடந்தே சென்ற இளைஞர்
நடந்தே சென்ற இளைஞர்
author img

By

Published : Apr 22, 2020, 12:32 PM IST

கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மல்லிகார்ஜுனா குருமத் என்பவர் பெங்களூருவிலிருந்து கால்நடையாக விஜயபுரா வரை செல்ல பயணத்தை மேற்கொண்டுள்ளார். மூன்று நாள்கள் 400 கி.மீ. நடந்து கதக் மாவட்டத்தில் முண்டர்கி என்ற நகரத்தை அடைந்துள்ளார்.

மேலும் ஏற்கனவே இவர் காணாமல்போனதாக பெங்களூருவில் உள்ள சுப்பிரமண்யா நகர் காவல் நிலையத்தில் புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர் முண்டர்கி நகரில் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

வெகுதூரம் நடந்து வந்ததால் அவர் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் காவல் துறையினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் கரோனா தொற்று குறித்து பரிசோதனையும் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது

இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் காவல் துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சமூக இடைவெளியுடன் முத்தப் போட்டி... கடை திறப்பில் ருசிகரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.