இமாச்சலப் பிரதேசம் மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இந்தச் சூழலில் கரோனா பரவல் அடிப்படையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆதர்ஷ் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டின் சுற்றுச் சுவர் ஏறி குதித்து தனது சகோதரருடன் பார்சார் பகுதிக்கு மதுபானம் வாங்கச் சென்றுள்ளார். இது குறித்து ஆதர்ஷின் மனைவி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
அதனடிப்படையில், காவல் துறையினர் ஆதர்ஷ் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித் துறைக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை