டெல்லி உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகள் அடைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று இளைஞர் ஒருவர் இரும்பு தடுப்பைத் தாண்டிச் சென்று சிங்கத்தின் அருகில் அமர்ந்துகொண்டார்.
இதைப் பார்த்த அங்கிருந்த மக்கள் அவரை 'வந்துவிடு வந்துவிடு' என்று கத்தினர். ஆனால் அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சிங்கம் அவரை தாக்காமல் நுகர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தது. இதையடுத்து, உடனடியாக விரைந்துவந்த பூங்கா அலுவலர்கள் சிங்கத்திற்கு மயக்க ஊசி போட்டு இளைஞரை மீட்டனர்.
இதையும் படிங்க: 'வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்' - அமித் ஷா!