அஸ்ஸாம் மாநிலம் திப்ருகர் நகரில் பாகிஸ்தான் கொடியை கையில் வைத்திருந்ததாக ராஜு குரேஷி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
இது குறித்து திப்ருகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஹிரன்யா குமார் தோத்தியா கூறுகையில், “குரேஷி என்பவர் கையில் பிறை நிலா, நட்சத்திரங்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருந்த கொடியை கையில் வைத்திருந்தால், அவரைப் பொதுமக்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் குரேஷி ஒரு தொழிலாளி என்பது தெரியவந்தது.
குரேஷி தனது வீட்டில் தச்சர் வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதியில் கொடி ஒன்று வந்து விழுந்தது. அந்தக் கொடியில் நிலா, நட்சத்திர வடிவங்களில் பிரிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. இதைக் குரேஷி கையில் எடுத்து தனது மகனிடம் கொடுத்துள்ளார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாகிஸ்தான் கொடியை கையில் வைத்திருப்பதாக நினைத்து அவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், “அந்தக் கொடி முழுவதும் கறுப்பு நிறத்திலும், கிங்ஸ் ஆஃப் கைட்ஸ் எனவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் மதம் சார்ந்த எந்தப் பிரச்னையும் இதில் இல்லை.
மேலும் குரேஷியிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், இதில் எந்தவித வகுப்புவாத உள்நோக்கம் இல்லை எனத் தெரியவந்தது” எனத் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை உளவு பார்க்கவந்த பாகிஸ்தான் ’புறா’