ETV Bharat / bharat

ஒன்றரை ஆண்டுகளாக கழிவறை வாசம் செய்த பெண் விடுவிப்பு

author img

By

Published : Oct 15, 2020, 7:27 PM IST

பானிபட்: ஒன்றரை ஆண்டுகளாக வீட்டின் மொட்டை மாடி கழிப்பறையில் பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மாநில நிர்வாக அலுவலர்கள் இன்று (அக்.,14) விடுவித்துள்ளனர்.

woman
பெண்

ஹரியானா மாநிலம் பானிபேட் மாவட்டத்தில் ஒருவர் தன் மனைவியை அடித்து துன்புறுத்தி கழிவறையில் வைத்து பூட்டிவிடுவதாகவும், ஒவ்வொரு 15 - 20 நாளுக்கு ஒருமுறைதான் வெளியே விடுவதாகவும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் ரஜினி குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் ரஜினி குப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் நம்ப இயலாத சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. கழிவறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண்ணிற்கு உண்ண போதுமான உணவும் கொடுக்கப்படுவதில்லை.

சுமாராக ஒரு ஆண்டுக்கும் மேலாக அடைத்து வைத்து அவரது கணவர் துன்புறுத்தியுள்ளார். சுத்தமான ஆடை, சத்தான உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எதுவுமே கிடைக்கப் பெறாமல் மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் தான் ரஜினி குப்தா அப்பெண்ணை மீட்டுள்ளார்.

தனது இருண்மைக் காலத்தில் இருந்து வெளியேறிய அப்பெண், முதலில் சாப்பிட ஏதேனும் வேண்டும் என பாதுகாப்பு அலுவலரிடம் கேட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது அந்தப் பெண்ணின் கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், தனது மனைவி உடல்நிலை சரியில்லாதவர் எனத் தெரிவித்ததோடு எதையாவது சாப்பிட்டு விட்டு வீட்டில் அடிக்கடி மலம் கழிப்பார் என்றும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

மனைவிக்காக பல மருத்துவர்களைச் சந்தித்து சிகிச்சை அளித்ததாகக் கூறும் அவர், எவ்வித மாற்றமும் இல்லாததால் கழிவறையில் பூட்டி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் கூறுவது முற்றிலும் பொய் என அக்கம்பக்கத்தினர் பாதுகாப்பு அலுவலர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கணவனால் கழிவறையில் பூட்டி வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பெண்ணிற்கு 15, 13,11 ஆகிய வயதுகளில் குழந்தைகள் இருந்தும், அவர்களாலும் கூட தங்களது தாய்க்கு உதவமுடியாமல் போனது எதிர்பாராத ஒன்றாக உள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:சொத்துத் தகராறில் தலைமைக் காவலரின் மனைவிக்கு கத்திக்குத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.