உத்தரப்பிரதேச மாநிலத்தில், ராம்பூர் மாவட்டத்தில் மிலக் தெஹ்ஸில் என்ற கிராமத்தில், எட்டு வயது சிறுமியான தனது சொந்த மகளை தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். கடந்த ஜூன் 14 ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்தச் சிறுமியின் தாய், அவரது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்குத் திரும்பி வரும்போது அக்கம் பக்கத்தினர் அவரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். உடனே, அவர் தன் கணவன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினர், அவரை நேற்று முன் தினம் (ஜூன் 16) கைது செய்தனர். பின்னர் அந்தச் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து மிலக் வட்ட அலுவலர் தரம் சிங் கூறியதாவது, 'குற்றம் சாட்டப்பட்டவருக்கு 35 வயது ஆகிறது. அவர் தினசரி கூலி வேலை செய்பவர். மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது உறுதியானது. அதனால் அவர் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்' எனத் தெரிவித்தார்.