ETV Bharat / bharat

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு பொதுமக்கள் சரமாரி அடி! - பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

ஹரியானா:  பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண். காவல் துறைக்குச் செல்லும் முன்னரே பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

man held for sexually harassing school girls

author img

By

Published : Jan 21, 2020, 2:56 PM IST

தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த நபரை பெண் காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சுனிதா தாகா என்னும் காவல் அலுவலர் கூறுகையில், ஹரியானா மாநிலத்தில் பம்மி சௌக் பகுதியில் வசிக்கும் பவன் என்னும் நபர் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். அவர்களிடம் அநாகரிகமாகவும் நடந்துள்ளார். இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்றார்.

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியின் தாயார் ஒருவர்தான் அந்நபரை பிடித்துள்ளார். குற்றவாளி தொடர்ந்து கொடுத்த தொல்லையினால் பள்ளிக்கு தனியாகச்செல்ல குழந்தைகள் பயந்துள்ளனர். இதனால் மாணவியின் தாயார் ஒருவர் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிக்கிய அந்நபரை கையும் களவுமாகப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். காவல் துறையிடம் ஒப்படைப்பதற்கு முன் அப்பகுதி மக்கள் குற்றவாளியை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அசாமிலிருந்து ராணுவத்தை திரும்பப்பெற முடிவு?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.