ETV Bharat / bharat

6 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை: உறவினர் கைது - Man held for raping, killing 6-year-old niece

காந்திநகர்: தனது சகோதரியின் ஆறு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலைசெய்த இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

minor raped in gujarat
minor raped in gujarat
author img

By

Published : Feb 2, 2020, 9:06 AM IST

குஜராத் மாநிலத்தில் ஆறு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலைசெய்த ஷைலேஷ் மாவி என்ற இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளியிலிருந்து சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாவி, குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளான்.

குழந்தையைத் தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற மாவி, அந்தப் பிஞ்சுவை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலைசெய்தான். பின்னர் சிறுமியின் உடலை அங்கிருந்த குளத்தின் அருகே வீசியுள்ளான்.

பள்ளிச் சென்ற சிறுமி நீண்ட நேரம் வீடு திரும்பாததால், குழந்தையின் பாட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். சிறுமியை மாவி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதைப் பார்த்ததாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், நேற்றிரவு மாவி கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "மாவி அச்சிறுமியின் தாயின் சகோதரன். அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவன் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்தவன். எட்டு மாதங்களுக்கு முன்புதான் பிணையில் வெளியே வந்தான்" என்றார்.

இதையும் படிங்க: பட்ஜெட்டின் தாக்கத்தை உணர திங்கள் வரை காத்திருங்கள்: நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.