தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், தனது வீட்டில் கொட்டகை அமைத்து மாடு, கன்றுக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். ஆனால், இவர் அவற்றை வளர்க்கிறேன் என்ற பெயரில் தினந்தோறும் கொடுமை படுத்தி வருவதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அளித்தப் புகாரின் பேரில் காவல் துறையினர், அவர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். காவல் துறை நடத்திய விசாரணையில் குற்றம் உறுதியானதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் துறை டிஜிபி மகனின் ஐ-பேட் திருட்டு!