தெலங்கானா கமரெட்டி மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தந்தை தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தாட்கோல் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து ஆஃபியா (10), மஹீன் (9), சோயா (7) ஆகியோரை உயிரிழந்த நிலையில் நேற்று காவல் துறையினர் மீட்டனர்.
கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அச்சிறுமிகளின் தந்தை ஃபயாஸ் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறியதாவது:
கமரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவருக்கு மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளன. தினக் கூலி வேலைக்கு செல்லும் ஃபயாஸ் குடி பழக்கம், சூதாட்டத்திற்கும் அடிமையானவர். இதனால், அவருக்கும், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இரவு வழக்கம் போல் சூதாட்டத்திற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். இதற்கு மனைவி தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த ஃபயாஸ் மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்தில் தனது மூன்று குழந்தைகளை கொலை செயய் திட்டமிட்டு ஏரிக்கு அழைத்து சென்றுள்ளார்.
பாசமாக தந்தை அழைத்ததை நம்பி உடன் சென்ற குழந்தைகள் மூவரையும் திடீரென ஒன்றன்பின் ஒன்றாக இரக்கமின்றி தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு ஃபயாஸ் சென்றார். ஏரியில் மிதந்த சடலங்கள் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின்பேரில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
இதையும் படிங்க: தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி: நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி