ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் வராததால் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு - Pune latest news

புனே: நானா பெத் பகுதியில் முதியவர் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வராததால் அவர் உயிரிழந்தார்.

காத்திருந்த முதியவர்
காத்திருந்த முதியவர்
author img

By

Published : May 16, 2020, 2:46 PM IST

புனேவில் உள்ள நானா பெத் பகுதியில் வசித்துவந்த யேசுதாஸ் மோதி பிரான்சிஸ்(57) என்பவருக்கு கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு உடல்நிலை சரியில்லாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால், உறவினர்கள் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவரை வீட்டின் வெளியே நாற்காலியில் அமரவைத்தனர். மூன்றரை மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

காத்திருந்த முதியவர்

அதையடுத்து உறவினர் ஒருவர் அருகில் உள்ள மருத்துவனைக்குச் சென்று அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அழைத்துள்ளார். ஆனால் அவரும் வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரான்சிஸை அவரது உறவினர்கள் டெம்போ ஒன்றை ஏற்பாடு செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவசர காலத்தில் ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்தும் ஓட்டுநர் வரமறுத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அப்பகுதிமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதுகுறித்த கணொலி காட்சி ஒன்று வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் உணவின்றி தவிக்கும் தமிழர்கள் - வைரலாகும் வாட்ஸ்அப் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.