ஜார்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டம் மெடினிநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கரோனா அறிகுறிகளுடன் அம்மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து பவன் லெஸ்லிகஞ்ச் பிளாக்கில் சில தினங்களுக்கு முன்பு தனிமைப்படுத்தப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையில் அவர் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் யாரும் கவனிக்காத நேரத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட துண்டைப் பயன்படுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட காவல் துறை துணை ஆணையர் சாந்தான்குமார் அக்ரஹாரி, "தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் அவர் அப்படிச் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட்டில் பட்டினி சாவு?