மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் யாதவும்(26). அதே பகுதியைச் சேர்ந்த நிதி மிஸ்ராவும் காதலித்துவந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று (ஜனவரி4) இரவு புறநகர் அருகே உள்ள கட்டடத்தில் சந்தித்துள்ளனர்.
அப்போது திடீரென ராகுல் யாதவ் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் காதலி நிதி மிஸ்ராவாவை சுட்டுக் கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதலி நிதி மிஸ்ராவுக்கு சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் பார்த்த வேறொரு நபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரத்திலிருந்த ராகுல் யாதவ் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
”இந்த சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. எதற்காக இந்த கொலை நடந்தது. இருவருக்கும் என்ன பிரச்னை என ராகுல் யாதவின் மொபைல் போன்களை ஆராய்ந்துவருகிறோம்.
இந்த சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சி ஒருவரிடமும் விசாரணை நடந்துவருகிறது” என காவல் துறை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) விஸ்வாஸ் நங்ரே பாட்டீல் தெரிவித்தார். இதுதொடர்பாக பங்கூர் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.