மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சஜோர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் (19). இவர் அருகேயுள்ள கோயிலுக்கு தண்ணீர் பிடிப்பதற்காக ஒருகை பம்புக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் குடத்தில் தண்ணீர் பிடித்திருந்தபோது, அருகே இருந்த மனோஜ் கோலி, அவரது இரண்டு சகோதரிகளான தாராவதி கோலி, பிரியங்கா கோலி ஆகியோரின் குடங்களில் தண்ணீர் பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த மனோஜ் கோலியும் அவரது இரண்டு சகோதரிகளும் விகாஸை கடுமையாக தாக்கியதோடு மட்டுமின்றி அவர் தண்ணீர் பிடித்துவைத்த குடத்தில் சிறுநீர் கழித்துள்ளனர். இதை குடிக்குமாறு மூவரும் விகாஸை வற்புறுத்தியுள்ளனர். இதனால், மிகவும் மனவேதனை அடைந்த விகாஸ் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன் இச்சவம் குறித்து இவர் கடிதம் எழுதிவைத்துள்ளார். இதன் அடிப்படையில் காவல்துறையினர் மனோஜ் கோலியையும் அவரது சகோதரிகள் மீது காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். உயிரிழந்த விகாஸ் குடும்பத்திற்கும், மனோஜ் கோலி குடும்பத்துக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முன்புகை இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தப்லீக் ஜமாத் உறுப்பினர்களை விடுவிக்கக் கோரி மனு