ETV Bharat / bharat

திருமண பந்தத்தைத் தாண்டிய உறவால் நேர்ந்த விபரீதம்! - ஓடிசா

புவனேஸ்வர்: ஜகத்சிங்பூரின் தாகான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில்  பலத்த தீக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.இது குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

man-burnt-alive
author img

By

Published : Oct 8, 2019, 7:43 AM IST

ஜகத்சிங்பூர் அருகே தாகான் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் பலத்த தீக்காயங்களுடன் ஆண் சடலம் ஒன்றை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின் அந்தச் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். விசாரணையில் இறந்தவர் நாயகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சன்பூர் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணா சம்பதிரே (27) என்பதும் அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார் என்பதும் தெரியவந்தது.

மேலும் கிருஷ்ணாவின் மனைவி இது குறித்து கூறும்போது, "அவர் ஒரு பெண்ணுடன் திருமண பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்தார். இதனிடையே, அவர் சனிக்கிழமை அகமதாபாத் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டுக் கிளம்பினார். ஆனால் ஜகத்சிங்பூரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருடன் உறவில் இருந்த அந்தப் பெண்தான் அவரை ஜகத்சிங்பூரில் அழைத்து சென்று தங்களுடைய உறவினர்களை வைத்து கொலை செய்துள்ளார்" என்று கூறினார்.

மேலும், இது குறித்து ஜகத்சிங்பூர் காவல் துறை உயர் அலுவலர் பிரகாஷ் சந்திரபால் கூறும்போது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பெண்ணை சந்தித்ததாகவும் கிருஷ்ணாவின் உறவினர்கள் கொடுத்த வாக்குமூலத்தை வைத்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

2019 Nobel Prize :மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்களின் பின்புலம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.