ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே உள்ள லப்பங் கிரமத்தைச் (Lapung) சேர்ந்த கலந்தஸ் பர்லா என்பவர் மாட்டிறைச்சியை மேலும் மற்ற இருவருடன் சேர்ந்து குந்தி மாவட்டத்தில் (khunti) விற்பனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று கலந்தஸ், உட்பட அவரது இரண்டு நண்பர்களும் மாட்டிறைச்சி விற்றுவந்ததிற்காக, அடையாளம் தெரியாத கும்பலால் அவர்கள் தாக்கப்பட்டனர். அதில் சம்பவம் இடத்திலேயே கலந்தஸ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவர் படுகாயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.