தெற்கு டெல்லியின் கோவிந்த் புரி அருகே குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் லிலு. இவரது குடிசை அருகே நேற்று மான் சிங் என்ற 65 வயது முதியவர் சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்து கோபமுடைந்த லிலு, அந்த முதியவரை கண்டித்து அவரது கன்னத்தில் அறைந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மான் சிங்கின் மகன்களான ரவி, நீல் கமல் ஆகியோர் லிலுவைத் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அப்போது ரவி அருகிலிருந்த சிமெண்ட் சிலாப்பை எடுத்து லிலுவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதே நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த லிலுவின் தம்பி சஞ்சய், தனது அண்ணன் தாக்கப்படுவதை பார்த்து ஓடி வந்துள்ளார். இதனைக் கண்டு முதியவர் மான் சிங், அவரது மகன்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தலையில் பலத்த காயமடைந்த லிலுவை மீட்ட சஞ்சய், அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லிலு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து டெல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
உயிரிழந்த லிலு மீது செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட 17 குற்ற வழக்குகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.