ETV Bharat / bharat

இஸ்லாமியரிடமிருந்து பொருள் வாங்க மறுத்தவர் கைது!

author img

By

Published : Apr 23, 2020, 10:14 AM IST

மும்பை: இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து பொருள் வாங்க மறுத்த நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Muslim
Muslim

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்று சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரிடமும் பரவிவருகிறது. இருப்பினும், இஸ்லாமியர்கள்தான் இந்தியாவில் கோவிட்-19 பரவக் காரணம் என்ற ரீதியில் தொடர்ந்து இங்கு வெறுப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தனே மாவட்டம் அருகேயுள்ள காஷிமிரா பகுதியில் கஜனன் சதுர்வேதி என்பவருக்குச் செவ்வாய்க்கிழமை காலை சில பொருள்களை டெலிவரி செய்ய இஸ்லாமியர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது கஜனன் சதுர்வேதி டெலிவரி நபரிடம் பெயரைக் கேட்டுள்ளார்.

டெலிவரி நபர் பெயரைக் கூறியுள்ளார். அதற்கு, "நான் இஸ்லாமியர்களிடமிருந்து எந்தப் பொருள்களையும் வாங்க மாட்டேன்" என்று கஜனன் சதுர்வேதி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டெலிவரி நபர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து டெலிவரி நபர் செய்த புகாரை அடுத்த கஜனன் சதுர்வேதி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295(A) - (மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்) பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை - தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட வழிமுறைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.