கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர், பட்டுலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் பிஷ்னுபடா மோன்டல் என்ற நபர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகத் தெரிவித்தார்.
தனது மனைவி ரனிடா மோன்டலின் உதவியுடன் தன்னை வற்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக அப்பெண் புகாரில் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பெண் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!