இது தொடர்பாக அவர், தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இன்று (அக்டோபர் 20) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மேற்கு வங்காளத்தில் மருத்துவ படிப்புகளில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்காக இப்போது 4,000 எம்.பி.பி.எஸ்., மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
புருலியாவில் இயங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும், கௌரி தேவி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அம்மாநிலத்தில் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011ஆம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபோது மேற்கு வங்கத்தில் 1,355 எம்.பி.பி.எஸ் இடங்கள் மட்டுமே இருந்தது கவனிக்கத்தக்கது.