ETV Bharat / bharat

மதங்களைக் கொண்டு வெறுப்பரசியல் செய்யும் பாஜக- மம்தா தாக்கு - நாம் குறு, சிறு, நடுத்தர வணிகம்

கிறிஸ்துமஸ் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு மதங்களைக் கொண்டு வெறுப்பரசியல் செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Mamata demands national holiday on Christmas, accuses BJP of 'religious hatred'

author img

By

Published : Dec 22, 2020, 11:03 AM IST

கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பார்க் தெரு பகுதியில் அமைந்துள்ள ஆலன் பூங்காவில் கிறிஸ்துமஸ் திருவிழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, " கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறேன். உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை மத்திய பாஜக அரசு ஏன் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கவில்லை? அனைத்து மக்களுக்கும் அவர்களது பண்டிகையை கொண்டாட உணர்வுகளும் உரிமைகளும் உள்ளது எனில் கிறிஸ்தவர்கள் என்ன தீங்கு செய்தார்கள்?

இந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது அங்கிகரிக்கப்பட்ட விடுமுறை நாளாக இருந்தும் மத்திய அரசு தேசிய விடுமுறை நாளாக மறுப்பது ஏன்? இந்த கரோனா காலகட்டத்தில், மக்கள் தங்களது பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினம் தான் எனினும், அவர்கள் வழிகாட்டு நெறிமுறைளைப் பின்பற்றி கொண்டாட அனுமதிக்கப்பட வேண்டும்.

"இந்தியாவில் மதச்சார்பின்மை உள்ளதா என்ற கேள்வி எழ செய்கிறது. இங்கு நடைபெறும் மத வெறுப்பு அரசியலுக்காக வருந்துகிறேன். இதை கண்டிக்கவும் விரும்புகிறேன்." என்றார்.

முன்னதாகப் பேசிய அவர், "இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான மாநிலத்தில் ஊழலும்,அராஜகமும் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவை முற்றிலும் தவறானது.

நாம் குறு, சிறு, நடுத்தர வணிகத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளோம். சாலைகள் கட்டமைப்பிலும் முதலிடத்தில் உள்ளோம். இவை அனைத்தும் மத்திய அரசின் தரவுகளிலேயே உள்ளது.

ஒரு உள்துறை அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் மக்களிடம் பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளத் தக்கது அல்ல. நாட்டில் அரசியல் செய்வதற்காக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அரசியலுக்காக இவர்கள் அனைத்தையும் செய்வர்" என கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து- 5 பேர் உயிரிழப்பு...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.