ETV Bharat / bharat

மத்திய அரசு ஜனநாயகத்தை நசுக்க பார்க்கிறது - சீறும் மம்தா - திரிணாமூல் காங்கிரஸ்

கொல்கத்தா: மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களை இடைநீக்கம் செய்வதன் மூலம் மத்திய அரசு ஜனநாயகத்தை நசுக்க பார்ப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Mamata
Mamata
author img

By

Published : Sep 21, 2020, 5:50 PM IST

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தக மசோதா உள்ளிட்ட விவசாயம் சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றியது.

இந்த மசோதாக்கள் மீது நேற்று(செப்.20) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்படி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்பட எட்டு பேரை ஒரு வாரம் இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

இந்நிலையில், வெங்கையா நாயுடுவின் இந்த அறிவிப்பை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க போராடிய 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது துரதிர்ஷ்டவசமானது. இது ஜனநாயக விதிமுறைகளையும் கொள்கைகளையும் மதிக்காத இந்த எதேச்சதிகார அரசின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

  • Suspension of the 8 MPs who fought to protect farmers interests is unfortunate & reflective of this autocratic Govt’s mindset that doesn’t respect democratic norms & principles. We won't bow down & we'll fight this fascist Govt in Parliament & on the streets.#BJPKilledDemocracy

    — Mamata Banerjee (@MamataOfficial) September 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

நாங்கள் இந்த அரசுக்கு ஒருபோதும் தலைவணங்க மாட்டோம், இந்த பாசிச அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தெருக்களிலும் இறங்கி போராடுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அன்லாக் 4.0: வழிகாட்டுதல்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.