கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வரும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 66 நாட்களில் நான்கு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லாக்டவுன் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவலைத் தடுக்க கோயில்களில் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 4ஆம் கட்ட லாக்டவுன் மே 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில் ஜூன் 1ஆம் தேதி முதல் கோயில் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
வழிபாட்டுத் தலத்துக்குள் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜூன் 1ஆம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் அரசு அலுவலகங்கள் 100 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் பயனடையும் வகையில், பல தளர்வுகள் வழங்கப்படும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!