உலகில் ருத்ரதாண்டம் ஆடிவரும் கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு நாடுகள் முழுமையாக அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் கண்காணிப்பில் உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் தற்போது பரவ தொடங்கியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. மாநில அரசுகளும் தங்களால் முடிந்த வரை கொரோனா குறித்து விழிப்புணர்வுகளும், தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று கர்நாடாக முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"கொரோனா வைரல் தொற்று நோய் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்குகளையும், ஷாப்பிங் மால்களையும் ஒரு வாரத்திற்கு மூடப்படும். அதேபோல், கேளிக்கை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகளையும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். அனைத்து விதமான பொது நிகழ்வுகள் ஒரு வாரத்திற்கு நடைபெற கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதற்கு முன்னதாக, கேரளாவில் அனைத்து திரையரங்குகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொ.. கொ... கொரோனா...! எவரெஸ்ட் சிகர பயணம் ரத்து.!