ETV Bharat / bharat

சாலை வசதியில்லா கிராமம்...சிறுவனை 5 கிமீ தோளில் சுமந்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு! - Malkangiri doctor carries patient on cot for 5km

மால்கங்கிரி: சாலை வசதியில்லாத கிராமத்திற்கு நடந்து சென்று உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் தோளில் தூக்கி சென்று சிகிச்சையளித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

doctor Carries patient on cot for 5km
author img

By

Published : Sep 17, 2019, 4:11 PM IST

ஒடிசாவில் கைர்புட் மாவட்டத்தில் உள்ள நகுடா கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். இதனையடுத்து, சிறுவனின் பெற்றோர்கள் அருகிலுள்ள மால்கங்கிரி மாவட்ட மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸை அழைத்தனர். அதன்படி, மருத்துவர் ஷக்தி பிரசாத்தும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அக்கிராமத்துக்கு ஆம்புலன்ஸில் சென்றனர்.

ஆனால், கிராமத்திற்கு செல்ல சரியான சாலை வசதி இல்லாதது குறித்து அறியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு செல்ல சாலைகள் இல்லாத காரணத்தால் இடையிலேயே ஆம்புலன்ஸை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு திரும்பிச் செல்லாமல், சிறுவன் உள்ள கிராமத்துக்கு 5 கிமீ நடந்தே சென்றனர்.

தோளில் தூக்கிச் செல்லும் மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

அதன்பின், செயற்கையாக ஒரு கட்டிலை (stretcher) அமைத்து, சிறுவனை அமர்த்தியபின் மருத்துவரும், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் அக்கட்டிலை தோளில் தூக்கிக் கொண்டு ஐந்து கி.மீ நடந்தே சென்று ஆம்புலன்ஸ் நின்ற இடத்தை அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களை பலர் பாராட்டிவருகின்றனர்.

Intro:Body:

Malkangiri(Odisha): A Doctor of  Maoist-hit Malkangiri district has set an example for others by carrying a patient from an inaccessible village to ambulance on a cot. After villagers refused to carry the patient to the ambulance, the doctor shakti prasad dash and the ambulance driver carried him on a cot  five km for lack of good road connectivity. 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.