ETV Bharat / bharat

மலேசியாவில் இருந்து 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி! - மலேசியா மணல்

புதுச்சேரி: காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து, கட்டுமான பணிக்காக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

malaysia sand
author img

By

Published : Aug 21, 2019, 2:56 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாட்டில் இருந்து மணல் கொண்டு வரப்பட்டன. சமீபகாலமாக தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் வீடுகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவது கேள்விக்குறியானது. இதனையடுத்து, இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மலேசியாவிலிருந்து முதற்கட்டமாக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டது.

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல்

தனியார் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்ட மணலில் தரத்தை ஆய்வு செய்த காரைக்கால் துணை ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காரைக்கால் கப்பல் துறைமுகத்திற்கு வந்த மணலை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

மணல் விற்பனை தொடங்கப்பட்டது
மணல் விற்பனை தொடங்கப்பட்டது

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காரைக்கால் துணை ஆட்சியர் ஆதரஸ், இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசியா மணல் ஆய்வு செய்யப்பட்டு மணல் விற்பனை தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து காரைக்காலுக்கு மணல் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதன்மூலம் மணல் தட்டுப்பாடு குறையும் என்றும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Intro: மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து புதுச்சேரி மாநில கட்டுமான பணிக்காக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி : இனி காரைக்காலில் கட்டுமான பணிக்கு தடங்கல் இருக்காது என துணை ஆட்சியர் நம்பிக்கை.

Body: மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து புதுச்சேரி மாநில கட்டுமான பணிக்காக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் இறக்குமதி : இனி காரைக்காலில் கட்டுமான பணிக்கு தடங்கல் இருக்காது என துணை ஆட்சியர் நம்பிக்கை.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து மணல் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வரும் ஆனால் நிறுத்தப்பட்டது. இதனால் காரைக்கால், புதுச்சேரி வீடுகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டுவது கேள்விக்குறியானது. இதனையடுத்து, மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவிலிருந்து முதற்கட்டமாக 54 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் கப்பல் மூலம் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டது.

தனியார் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்ட மணலில் தரத்தை ஆய்வு செய்த காரைக்கால் துணை ஆட்சியர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று காரைக்கால் கப்பல் துறைமுகத்திற்கு வந்த மணலை பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய காரைக்கால் துணை ஆட்சியர் ஆதரஸ், இறக்குமதி செய்யப்பட்ட 54 ஆயிரம் மெட்ரிக் டன் மலேசியா மணல் வருவாய் துறை ஆய்வு செய்யப்பட்டு இன்று விற்பனை தொடங்கி வைத்தனர்.

மேலும், காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை வேலைகளுக்கும், வீடு, கட்டிடங்கள் கட்டவும் மணல் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும் வெளிநாட்டில் இருந்து காரைக்காலுக்கு மணல் இறக்குமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று கூறிய அவர் இதன்மூலம் மணல் தட்டுப்பாடு குறையும் என்றும், பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேட்டி - ஆதர்ஸ் ,காரைக்கால் துணை ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.