மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களை வீழ்த்த பல முயற்சிகளை பாஜக கையாண்டு வருகிறது. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை வீழ்த்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுரேந்திர பூனியாவை களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேபரேலி தொகுதியில் 2004 ஆம் ஆண்டு முதல் நான்கு முறை சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து பூனியா கூறுகையில், சோனியா காந்திக்கு எதிராக தன்னை பிரதமர் மோடி களமிறக்கினால், அந்த பணியை சிறப்பாக செய்து முடிப்பேன்.
மேலும், இந்த போட்டியானது காவலாளிக்கும், திருடனுக்கும் இடையே நடக்க உள்ள யுத்தம் என்று தெரிவித்தார். பாஜகவில் சேர்ந்தது நாட்டு மக்களுக்கு சேவை செய்யதான் என்றும், பிரதமர் மோடிக்கு தேசியவாதமும், தேச பாதுகாப்புதான் முக்கியம் எனவும் தெரிவித்தார்.
சுரேந்திர பூனியா, விசிஷ்ட் சேவா பதக்கம் உள்பட பல சர்வதேச விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.