ETV Bharat / bharat

அந்நிய முதலீடுகளில் கவனம் செலுத்தும் நேரமிது

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இழந்த பொருளாதாரத்தினை மீட்க மத்திய அரசு அந்நிய நேரடி முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Major Opportunities for Foreign Investments

author img

By

Published : Jul 10, 2020, 3:56 AM IST

நாட்டின் பொருளாதாரம் கடுமையான மந்தநிலைக்கு ஆளாகியிருந்த ஒரு நேரத்தில், கரோனா தொற்றுநோய் வளர்ச்சியின் அனைத்து நம்பிக்கையையும் தகர்த்துள்ளது. அதன் கடுமையான தாக்குதல் பல தொழில்களை அழித்து, வேலை வாய்ப்புகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

'ஆத்மநிர்பார் பாரத்' என்ற சுயசார்பு இந்தியாவிற்கான சிறப்பு பொருளாதார தொகுப்பு கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கரோனா வைரஸ் உருவாக்கிய இடரிலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், பொருளாதாரத்தின் மறுமலர்ச்சிக்கு அந்நிய நேரடி முதலீடுகள் (FDI) அவசியம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME ) துறையில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு திட்டங்களின் வடிவத்தில் பரந்த முதலீடுகள் பொருளாதார முன்னேற்றத்தின் வேகத்தை மீட்டெடுக்கும்.

தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், நீர்வழிகள், ரயில்வே, மெட்ரோ, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போன்றவற்றில் ரூ.50-60 லட்சம் கோடி முதலீடுகள் சாத்தியமானால் வியக்கத்தக்க முடிவுகளை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, ​​இந்தியா 2019-20ஆம் ஆண்டில் 51 பில்லியன் டாலர் வரை அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்ததன் மூலம் சிறப்பாக செயல்பட்டது என்று வர்த்தக, முதலீடு மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்புப் பிரிவு கூறியுள்ளது. மே மாதத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மேற்கொண்ட கணக்கீடுகளின்படி, அந்தத் தொகை மொத்தம் 73 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய்).

தற்போது கட்கரி அதைவிட பத்து மடங்கு அதிகமாக இலக்கு வைத்துள்ளார். சீனாவை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ள நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் லக்ஸம்பேர்க் நாட்டை விட இரு மடங்கு அளவு நிலங்களை தர தயார் என்று கட்கரி கூறுகிறார், ஆனால் இலக்கை அடைய இன்னும் பல மைல்கற்களை கடக்க வேண்டும்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கையை வைத்துப் பார்க்கும் போது, அந்நிய நேரடி முதலீட்டில் திடீர் முன்னேற்றம் என்பது சாத்தியமில்லை. 2009-14 உடன் ஒப்பிடும்போது 2014-19 ஆம் ஆண்டில் நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீடு 190 பில்லியன் டாலரிலிருந்து 284 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. தற்போதைய டாலர் மாற்று விகிதத்தில் கணக்கிடப்பட்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக நான்கு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஆகும்.

1929-1939 ஆம் ஆண்டின் பெரும் மந்தநிலைக்கு அடுத்து, கரோனா தொற்றுநோயின் விளைவால் தற்போதைய கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது என பன்னாட்டு நிதியம் அறிவித்தது. இதன் விளைவாக, இந்த ஆண்டு சர்வதேச அந்நிய நேரடி முதலீடு கடந்த காலங்களை விட 40 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் மதிப்பிட்டது.

இந்த நிலையில், சாத்தியமில்லாத இலக்குகளை நிர்ணயிப்பதை விட, நிலையான முன்னேற்றத்திற்கான தடைகளை விவேகத்துடன் தவிர்ப்பது திட்டமிடுபவர்களுக்கு நல்லது.

அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், பிரேசில், இங்கிலாந்து, ஹாங்காங் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் நம்மை விட சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா அந்த பட்டியலில் இருக்க விரும்பினால், அது மிகவும் நெகிழ்வான வர்த்தக நிலைமைகளை வரையறுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இணக்கமான வணிகச் சூழலை வழங்க வேண்டும்.

கரோனா நெருக்கடியை அடுத்து சீனாவிற்கு ஏற்பட்ட பாதிப்பால் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் பயனடையும். அதே நேரத்தில் சீனாவுடனான நீண்டகால பிரச்னைகள் காரணமாக இந்தியாவால் அந்த நன்மைகளைப் பெற முடியவில்லை. அதிகரித்த வரிவிதிப்பு, மின்சார கட்டணங்கள், முதலீடுகள் மீதான வட்டி, ஒப்புதல்களை வழங்குவதில் தாமதம், மாநில அளவில் ஊழல், போக்குவரத்து சிக்கல்கள் போன்றவை இதற்கு காரணமாக அமையலாம்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எதிராக செயல்படும் பிரச்னைகள் குறித்து விரைவான திருத்த நடவடிக்கை எடுப்பது, நெகிழ்வான மற்றும் பாதுகாப்பான வணிக, வர்த்தக சூழலை அறிமுகப்படுத்துவது, மற்றும் பிற நாடுகளுக்கு கிடைக்காத, தனித்துவமான செல்வமான இளைஞர் சக்தியை, பயிற்சியளிக்கப்பட்ட வளங்களாக மாற்றுவது போன்றவற்றின் மூலம் உலக நாடுகளின் நம்பிக்கையைப் பெறுவதிலும், முதலீடுகளை பெரிய அளவில் ஈர்ப்பதிலும் இந்தியா வெற்றிபெற முடியும்.

இதையும் படிங்க: கிராமப்புறங்களுக்கான புதிய வளர்ச்சி மாதிரியை உருவாக்கும் நேரமிது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.