ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற கனகா துர்கா கோயிலில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி மூன்று பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நிலச்சரிவின் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திரகீலாத்ரி மலையிலிருந்து கற்பாறைகள் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் உருண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோயிலுக்கு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது. முதலமைச்சரின் வருகை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அந்த இடத்தில் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: 13 ரயில்நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உயர்வு!