ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று (மே7) நடத்த விஷ வாயு விபத்தில் பத்து பேர் உயிர் இழந்துள்ளனர். மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த காலங்களில் நாட்டை உலுக்கிய விஷவாயு கசிவு சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.
- 06.02.2020. உ.பி. சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு கசிந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
- 12.05.2019: மகாராஷ்டிரா மாநிலம் தாராபூரில் உள்ள ஒரு ரசாயன கூடத்தில் வெளியான நச்சு வாயுவை சுவாசித்த மேற்பார்வையாளர் உள்பட மூன்று பணியாளர்கள் உயிர் இழந்தனர்.
- 03.12.2018: மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் இருந்து கசிந்த அமோனியா வாயுவை சுவாசித்த 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- 12.07.2018 ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் எஃகு பிரிவில் பணியாற்றிய ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 03.07.2018: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் தொழிற்சாலையில் எரிவாயு கசிந்ததில் மூன்று உயிரிழந்தனர். இருவர் பலத்த காயமுற்றனர்.
- 06.02.2018: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலுள்ள பண்டகசாலையில் குளோரின் வாயு கசிந்ததில் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 03.05.2018: குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், கழிவு மறுசுழற்சி ஆலையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
- 08.05.2017: டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் விஷ வாயு கசிந்ததால் ராணி ஜான்சி சர்வோதயா கன்யே வித்யாலா பெண்கள் பள்ளியின் 475 மாணவர்களும் ஒன்பது ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- 15.03.2017: ஹரியானா மாநிலம் குருஷேத்ராவில் உள்ள குளிர் சேமிப்பகத்தின் எரிவாயு அறையிலிருந்து அமோனியா கசிந்தபோது ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது.
- 03.11.2016: மாநில பொதுத்துறை நிறுவனமான குஜராத் நர்மதா பள்ளத்தாக்கு உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் லிமிடெட் நடந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் மரணித்தனர். 13 பேர் காயமுற்றனர்.
- 2016ஆம் ஆண்டு குஜராத் வதோதரா மாவட்டத்திலுள்ள போர் கிராமத்தில் நடந்த சிலிண்டரிலிருந்து குளோரின் வாயு கசிந்ததில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- 13.07.2014: சத்தீஸ்கர், பிலாய் எஃகு ஆலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 50 பேர் காயமடைந்தனர். இதன் விளைவாக, துணை மேலாளர் பி.கே.சிங்கால், என்.கே.கதரியா, 5 உயர் அதிகாரிகள் இறந்தனர்.
- 27.08.2014: மேற்கு வங்கம் பர்த்வானில் ஒரு வெல்டிங் பட்டறையில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்ததில் இரு பெண்கள் இறந்தனர். 50 பேர் பாதிக்கப்பட்டனர்.
- 07.08.2014: கேரள அரசுக்குச் சொந்தமான கொல்லம் ஆலையில் இருந்து எரிவாயு கசிந்ததில் 70 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டனர்.
- 05.06.2014: தமிழ்நாட்டில், தூத்துக்குடி நிலா மீன் பதப்படுத்தும் பிரிவில் அம்மோனியா எரிவாயு குழாய் வெடித்ததில் 54 பெண்கள் மயக்கமடைந்தனர்.
- 18.03.2014: தமிழ்நாட்டிலிலுள்ள சாயமிடும் ஆலையில் பணிபுரிந்த ஏழு தொழிலாளர்கள் தமிழகத்தில் அரிக்கும் விஷ வாயுவை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் காரணமாக இறந்தனர்.
- 23.03.2013: தூத்துக்குடி, சல்பர் டை ஆக்சைடு என்று கருதப்படும் ஒரு நச்சு ரசாயன வாயு ஆலையில் இருந்து வெளியேறி இருமல் எரியும் உணர்வையும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தியது. இதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- 02.08.2011 கர்நாடகாவின் ஜிண்டால் எஃகு ஆலையில் உலையில் இருந்து கசிந்த விஷ வாயுவை சுவாசித்ததில் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர்.
- 16.07.2010: மேற்கு வங்காளத்தின் துர்காபூர் எஃகு ஆலையில் கார்பன் மோனாக்ஸைடு சுவாசித்து 25 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
- 12.11.2006: குஜராத், அங்கலேஷ்வர் நகரமான பருச்சில் உள்ள எண்ணெய் தொழிற்சாலையில் எரிவாயு கசிந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
- 02.12.1984: போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் 30 டன் அதிக நச்சு வாயு வெளியாகி பாதிப்பு ஏற்பட்டதில் பயங்கரமான சோகம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வை இழந்தனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இவ்வாறு இந்தியாவில் இதுவரை மூவாயிரத்து 787 விஷவாயு கசிந்து விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் சிக்கி 16 ஆயிரம் பேர் தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர்.