ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஹந்த்வாரா பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், கர்னல் அசுதோஷ் சர்மா, மேஜர் அனுஜ் சூத், நாயக் ராஜேஷ் குமார், லான்ஸ் நாயக் தினேஷ் சிங் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.
பின்னர், வீட்டில் கைதிகளாக இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஹந்த்வாராப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய நடவடிக்கையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில், வீர மரணம் அடைந்த மேஜர் அனுஜ் சூத்துக்கு சவுரியா சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'லடாக் ஹீரோ' சந்தோஷ் பாபுக்கு மகா வீர் சக்ரா!